நீங்கள் youtube சேனல் ஆரம்பிக்க போறீங்களா டிப்ஸ் இதோ | New youtube channel content ideas tamil

 நீங்கள் YouTube சேனல் ஆரம்பிக்க போறீங்களா டிப்ஸ் இதோ



MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME

நாம் ஒரு நிறுவனத்திலோ அல்லது சொந்தமாக தொழில் செய்தாலோ அதில் ஈடுபடும் நேரத்திற்கு மட்டுமே வருமானம் வரும். ஆனால் நாம் தூங்கி கொண்டடிருக்கும் போதும் நமக்கு வருமானம் ஈட்டித்தரும் ஒரு தளம்தான் யூடியூப்.

நாம் ஒரு விடியோவை அப்லோடு செய்துவிட்டால் அந்த விடீயோவிற்கு வரும் வியூஸ்., நமக்கு வருமானத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.

யூடியூப் சேனல் ஆரம்பிக்க போகிறவர்களுக்கு பொதுவான ஒரு குழப்பம் வருவதுண்டு. எதை பற்றி விடியோவாக போடலாம், எந்த மாதிரியான வீடியோ போடலாம், என்ன மாதிரியா வீடியோ போட்டால் வியூஸ் அதிகரிக்கும். என்பதில் குழப்பம் வருவதுண்டு.

இதை படித்த முடித்த பின் உங்களுக்கு ஒரு தெளிவு வரும்.

யூடியூப் ஆரம்பிப்பதற்கு என்ன தேவை.

ஸ்மார்ட்போன், ஈமெயில் ஐடி, இன்டர்நெட் கனெக்சன். இது இருந்தாலே போதும். 

சரி எதுமாதிரியான கண்டன்ட் போடலாம்.

1.உங்களுக்கு எதில் ஆர்வம் அதிகம் , எதைப்பற்றி அதிகம் தேடி பார்ப்பீர்கள், உங்களுக்கு எதைப்பற்றி நன்றாக தெரியும்., அதில் ஆர்வம் காட்டுங்கள்.

மற்றவர்கள் ஆரம்பித்தது போல்., நாமும் டெக் சேனல்,குக்கிங் சேனல்,பிராங்க் சேனல்,ட்ரோல் சேனல் என்று மற்றவர்களை பார்த்து ஆரம்பிக்காதீர்கள்., அப்படி ஆரம்பித்தால் அதில் ஆர்வம் நாளாக நாளாக உங்களுக்கு குறைந்து போகும்.

2.யூடியூபில் எதை பற்றிய வீடியோக்கள் அதிகம் இல்லையோ அது எதுவென்று கண்டுபிடித்து அதற்க்கான ஒரு சேனலை தொடங்குங்கள்.

3.நீங்கள் பதிவேற்றம் செய்யும் வீடியோ அப்பொழுது மட்டும் ட்ரெண்டிங் ஆகும்படியான வீடியோக்களாக இல்லாமல். எப்பொழுது வேண்டுமானாலும் youtube இல் சர்ச் செய்து பார்க்கும் படியான வீடியோக்களை உருவாக்குங்கள். 

(உதாரணத்திற்கு:ஆதார் கார்டிற்கு அப்டேட் செய்யும் வசதி அதனுடைய வழிமுறைகள் இப்பொழுது ஆன்லைனில் அதாவது இ சேவை மையத்தின் மூலம் நாம் அப்டேட் செய்து கொள்ளலாம். 

ஒருவேளை நீங்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கான வசதி நீங்கள் தாலுகா ஆபிஸில் மட்டும்தான் செய்ய முடியும் என்கிற விதிமுறைகள் வரலாம். அதனால் இதனுடைய வழிமுறைகள் மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.இப்படி வழிமுறைகள் மாறும் பொழுது நீங்கள் பதிவேற்றம் செய்த பழைய வீடியோக்களை யாரும் தேடிப் பார்க்க மாட்டார்கள் புதிய வழிமுறைகள் எதுவாக இருக்கும் என்று அதைத்தான் அதிகம் தேடி பார்ப்பார்கள். 

வாட்சப்பில் வந்துள்ள PASSKEY புதிய அப்டேட்

இதனால் நீங்கள் பதிவற்றம் செய்த பழைய வீடியோவுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்து கொண்டே இருக்கும்.இதுபோல் தலைப்புகளை தேர்ந்தெடுக்காமல்.  அதாவது நீங்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் அதன் வழிமுறைகள் மாறாமல் இருக்கும் பட்சத்தில் அதன் பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே வருவதுண்டு.

உதாரணத்திற்கு ஒரு குண்டு பல்புக்கு வயர் கனெக்சன் கொடுக்கிறீர்கள் என்றால் அது எப்படி கொடுக்க வேண்டும் என்று நீங்கள் வீடியோவாக அப்லோடு செய்தால். அந்த வழிமுறை எத்தனை ஆண்டு ஆனாலும் அது அப்படியே தான் இருக்கும் அதனுடைய வழிமுறை மாறப் போவதில்லை. அதனால் மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை பார்ப்பதற்கு அதிகம் வாய்ப்புண்டு.

அதனால் உங்கள் வீடியோக்களை திரும்பத் திரும்ப பார்க்கும் படியான ஒரு கற்பனைத் திறன் வாய்ந்த தலைப்புகளாக அமைய வேண்டும்.

4.பணம் செலவழித்து ஒரு கன்டென்டை உருவாக்கும் படியான வீடியோக்களை அப்லோடு செய்வதை ஆரம்பத்தில் தவிர்த்து விடுங்கள் அதாவது ஒரு பொருளை பணம் செலுத்தி வாங்கி அந்த பொருளின் நன்மை தீமைகளை விவரிக்கும் படியான ஒரு சேனலை ஆரம்பித்தால்;உங்களிடம் பணம் இருக்கும் பொழுது ஒரு பொருளை வாங்க முடியும் அடுத்ததாக வீடியோ அப்லோடு செய்வதற்கு இன்னொரு பொருளை வாங்குவதற்கு பணம் இல்லாத பொழுது நீங்கள் வீடியோ அப்லோடு செய்வதற்கான காலங்கள் நீண்டு கொண்டே போகும்.

இதனால் உங்கள் சேனல் வளர்ச்சி அடைவதற்கு தடங்கலாக இருக்கும்.அதனால் பணம் செலவழிக்கும் படியான எந்த ஒரு கண்டன்டயும் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்காமல் எந்த ஒரு முதலிடும் இல்லாமல் கன்டென்ட் உருவாக்கும் படியான சேனலை நீங்கள் உருவாக்குங்கள்.

5.நீங்கள் தொடங்கிய சேனல் வீடியோக்களை., தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பார்க்கும்படியான வீடியோக்களை அப்லோடு செய்யாமல் மற்ற மொழி தெரிந்தவர்களும் உங்களுடைய வீடியோக்களை பார்ப்பதற்கான ஒரு தலைப்புகளாக CONTENT  இருக்க வேண்டும்.

அதாவது உங்களுடைய வீடியோக்கள் நீங்கள் தமிழில் பேசும் பொழுது அதை மற்ற மொழிகாரர்களுக்கு அது புரிந்து கொள்வதற்கு சிரமம். அதனால் நீங்கள் பேசும் அந்த வார்த்தைகளை படங்களாக தெரியும் படியாக அல்லது எழுத்து வடிவில் பொதுவான ஒரு மொழியை தேர்ந்தெடுத்து எழுத்து வடிவில் அந்த வீடியோவில் பார்வையாளர்கள் பார்க்கும்படி வீடியோவை உருவாக்கினால்.,

பழைய போன்களை வாங்கும் போதும் விற்கும் போதும் உங்கள் தகவல்கள் திருடப்படலாம்

 உங்கள் வீடியோக்களை மற்ற மொழிக்காரர்களும் பார்த்து புரிந்து கொள்வதற்கும் தொடர்ந்து உங்களுடைய வீடியோக்களை பார்ப்பதற்கும் துணையாக இருக்கும். இதனால் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் இல்லாமல் மற்ற மொழிக்காரர்களும் உங்களுடைய youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்வதற்கு இது வசதியாக இருக்கும்.


 More Information About Tech Related Updates SUBSCRIBE Our YOUTUBE CHANNEL👇




கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.