யாருக்கும் தெரியாமல் வாட்சப் மெசேஜ்யை எப்படி மறைத்து வைப்பது | How to hide WhatsApp message without anyone knowing

 யாருக்கும் தெரியாமல் வாட்சப் மெசேஜ்யை எப்படி மறைத்து வைப்பது


MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME

நீங்கள் வாட்சப்பை அதிகம் பயன்படுத்தும் நபரா!?,  அப்படி என்றால் இது போன்ற வாட்ஸ் அப்பில் முக்கியமான செட்டிங்குகளை கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் மற்ற செயலிகளை பார்ப்பது விட whatsapp செயலியை ஒரு முறையாவது நாம் திறந்து பார்ப்பதுண்டு.

வாட்சப்பில் செய்தி வராமல் இருந்தால் கூட நாம் அடிக்கடி அதனை திறந்து பார்ப்பது உண்டு.
வாட்சப் செயலி நமது தகவல் பரிமாற்றத்திற்கு மிகவும் அவசியமான ஏன் அத்தியாசியமான ஒரு செயலி என்று சொல்லலாம்.
நாம் ஒருவருக்கு அனுப்பும் செய்தி வீடியோவாக இருந்தாலும் சரி அல்லது போட்டோ வேறு ஏதாவது டாக்குமெண்ட்ஸ் போன்ற பைல்களை அனுப்புவதற்கு நாம் முதலில் பயன்படுத்துவது வாட்சப்பை தான்.

whatsapp வந்ததிலிருந்து இமெயில் ஐடியை பயன்படுத்துவது அனைவரிடமும் குறைந்து கொண்டே வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படிப்பட்ட வாட்சப் செயலியை நாம் எப்படி பாதுகாப்பாக நாம் பயன்படுத்துவது என்று நாம் அதனை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நாம் ஒருவருக்கு அனுப்பும் செய்தியை அல்லது நாம் மற்றவர்களிடம் பகிரும் அனைத்து செய்திகளையும் அல்லது குறிப்பிட்ட அந்த நபரின் வாட்ஸ்அப் தொடர்பை நாம் மறைத்து வைத்துக் கொள்ள முடியும். அதற்கென்று தனியாக சீக்ரெட் கோடு அதாவது பாஸ்வோர்ட் போன்ற அமைப்பையும் நாம் உருவாக்கி வைத்துக் கொள்ள முடியும். 

இது எந்த அளவுக்கு உபயோகமானது என்று நாம் அறிந்திருக்க வேண்டும் நமது வாட்சப் செயலியை வேறு யாராவது திறந்து பார்க்கும் பொழுது அவர்களுக்கு அந்த செய்தியும் நாம் குறிப்பிட்ட ஒருவரிடம் செய்தியை பரிமாறிக் கொள்வதில் உள்ள தகவல்களை அவர்கள் அறியாதபடி நாம் இதனை மறைத்து வைத்துக் கொள்ள முடியும் இது போன்ற செட்டிங்குகள் வாட்சப்பில் உள்ளது.

இதனை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் இந்த அமைப்பை நமது வாட்ஸ் அப் செயலியில் எப்படி அமைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

முதலில் நீங்கள் யாருடைய காண்டாக்ட் ஐ அல்லது யாருடன் முக்கியமாக செய்தி பரிமாறிக் கொள்கிறீர்களோ அவர்களுடைய காண்டாக்ட் ஐ சில நொடிகள் வரை அழுத்தி பிடித்து இருக்கவும்
பின்பு மேலே தெரியும் மூன்று புள்ளிகளை தொடவும்
அதில் வரும் அமைப்புகளில் லாக் சாட் என்பதை தேர்ந்தெடுக்கவும்
இதை தேர்ந்தெடுக்கும் பொழுது  நீங்கள் whatsapp  செயலிக்கு என்ன பாஸ்வேர்டு, பிங்கர் பிரிண்ட் செய்து வைத்திருக்கிறீர்களோ அதனை இங்கு கொடுக்க வேண்டும்
ஃபிங்கர் பிரிண்ட் அல்லது சிகரெட் கோட் கொடுத்து எனபல் செய்துவிட்டால் குறிப்பிட்ட அந்த தொடர்பு நபர் அவருடன் நீங்கள் உரைய தகவல்கள் அந்த சாட் லாக் செய்து வைத்திருக்கும்
இப்பொழுது யாராவது வந்து அந்த அந்த செய்தியை திறந்து பார்க்க நேர்ந்தால் அதற்கு சிகரெட் கோட் அல்லது பிங்கர் பிரிண்ட் கேட்கும் அதனால் குறிப்பிட்ட அந்த நபரின் தகவல் உரையாடல்களை யாராலும் பார்க்க முடியாது படிக்கவும் முடியாது அது மட்டும் இல்லாமல் இதற்கென்று தனியாக நீங்கள் பாஸ்வேர்ட் அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைத்து கொண்டால் அந்த நபரின் காண்டாக்ட் 'சாட் டேப்' (CHAT TAB ) கீழே தெரியாதபடி மறைத்து வைக்கவும் முடியும்.

முழு விவரம் 👉: CLICK 

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.