வாட்சப்பில் புதிய வசதி | New update pinned message in WhatsApp chat tamil

வாட்சப்பில் புதிய வசதி

MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME

தொடர்ந்து அதிரடியான அப்டேட்களும் புதிய புதிய வசதிகளையும் தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது மெட்டா (META) நிறுவனம். இப்படி தொடர்ந்து புதிய வசதிகளை வழங்கி கொண்டிருப்பதால் வாட்சப் பயன்படுத்துவோர் இன்னும் அதிகமாக வாட்சப்பை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மெட்டா நிறுவனத்தின் மற்ற வலைத்தளங்களான முகநூல் (FACEBOOK) மற்றும் இன்ஸ்டாகிராம் (INSTAGRAM) ., இதில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு ஒரு வருமானம் வருவதற்கான வழிமுறைகள் இருப்பது போல்., வாட்சப்பிலும் அது போல் வசதியை கொண்டு வருவதற்கான முயற்சிகளைத்தான் மேற்கொள்கிறது என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இப்பொழுது நாம் உபயோகிக்கின்ற வாட்சப் செயலியில் பொதுவான அமைப்புகளின் வசதிகள் மற்றும் அதன் பாதுகாப்பில் உள்ள வசதிகளை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் இப்பொழுதுள்ள புதிய வசதி என்னவென்றால்., நமக்கு ஒருவர் தனிப்பட்ட முறையில் அல்லது, ஒரு குழுவில் ஒரு செய்தி அனுப்பியிருந்தால். அந்த செய்தியை நாம் பின் (PIN) செய்து வைத்து கொள்ளலாம்.

இதனால் என்ன பயன் ?


ஒருவர் அனுப்பிய செய்தியை நாம் அந்த சமயத்தில் படிக்க முடியாத பொழுது. அதை பிறகு படித்து கொள்ளலாம் என்றிருப்போம். ஆனால் அதை நம்ம மறந்து போவதும் உண்டு.

அல்லது அதன் பின்னால்  அதிக செய்திகள் வரும் பொழுது அந்த செய்தி  பின்னோக்கி சென்றுவிடும்.  நாம் தேடும் பொழுது நம் கண்ணில் தென்படாமல் போய்விடும்.

அப்படிப்பட்ட முக்கியமான செய்தியாக இருந்தால் அதை நாம் பின் செய்து வைத்துக்கொண்டால். அந்த செய்தி அந்த குழு பக்கத்தில் மேலே பின் வடிவில் நமக்கு நினை படுத்தும் வகையில் தெரியும். இதனால் அந்த செய்தியை நாம் நேரம் கிடைக்கும் பொழுது படித்து கொள்ளலாம்.

இந்த வசதியை நாம் சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் வரை அமைப்பை மாற்றி வைத்து கொள்ளலாம் அதற்க்கான வசதிகளும் அதில் உள்ளது.

இதை நமது வாட்சப்பில் எப்படி செய்வது:



வாட்சப்பில் எந்த செய்தியை பின் செய்து வைத்து கொள்ள விரும்புகிறீர்களோ 1., அந்த செய்தியை சில நொடிகள் வரை அழுத்தி பிடித்திருந்தால் அந்த செய்தி தேர்வாகிவிடும்.
2., மேலே உள்ள மூன்று புள்ளிகளை தொடவும்.
3., அதில் பின் என்ற வசதியை தேர்வு செய்யவும்.
4., அதன் பின்பு அதில் கண்ணபிக்கப்படும் நேரங்களில்  ஒன்றை தேர்ந்தெடுக்கவும் 
5., அதன் பிறகு பின் என்பதை அழுத்தவும்.




இப்பொழுது அந்த செய்தி அந்த பக்கத்தில் மேலே பின் செய்யப்பட்டிருக்கும்.
நாம் அதை தேர்ந்தெடுத்த காலங்கள் வரை அதை பிடித்துக்கொள்ள முடியும். அது காலாவாதியாகிவிட்டால் தானாகவே மறைந்து விடும்.

மேலும் வட்சப்பை பற்றி தெரிந்து கொள்ள : WHATSAPP ALL UPDATE

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.