வாட்சப்பில் வெரிஃபிகேஷன் கோட் மற்றும் கால் மீ வரவில்லையா?|Didn't receive verification code and call me on whatsapp?
வாட்சப்பில் வெரிஃபிகேஷன் கோட் மற்றும் கால் மீ வரவில்லையா?
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirvtOcNV-KcOhxjp9UP4VMTydo9pzYHoCrCR8_cuEIcxgepoXYhXcn3i1KDcC-bvGQnI7S5BR8gGXarbxH4-BZhk7rkI9CquU8AbO22xmZJ8lPR-x6lSzCTNZjT3ZA1Q17TxN39bFyiRCKPwQi7boy6vVbbnGsoFEdDgNbfEfD4_4hmMV-JbLV_wHJXZl7/s320-rw/a2zthakaval.blogspot.com.png)
A2Z Thakaval
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirvtOcNV-KcOhxjp9UP4VMTydo9pzYHoCrCR8_cuEIcxgepoXYhXcn3i1KDcC-bvGQnI7S5BR8gGXarbxH4-BZhk7rkI9CquU8AbO22xmZJ8lPR-x6lSzCTNZjT3ZA1Q17TxN39bFyiRCKPwQi7boy6vVbbnGsoFEdDgNbfEfD4_4hmMV-JbLV_wHJXZl7/s320-rw/a2zthakaval.blogspot.com.png)
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
நாம் பெரும்பாலும் தகவல் பரிமாறி கொள்வதில் முதலில் தேடுவதும், முதலில் உபயோகிப்பதும் வாட்சப்பைத்தான். இந்த வாட்சப்பில் பல பேர் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால்.
ஒருவர் ஸ்மார்ட்போனை மாற்றும் பொழுது அல்லது அந்த ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை மொத்தமாக அழிக்கும் பொழுது அதாவது ரீசெட் (RESET) செய்யும் பொழுதும் வாட்சப்பை அன் இன்ஸ்டால் (UNINSTALL) செய்துவிட்டு மறுபடி இன்ஸ்டால் (INSTALL) செய்யும்பொழுதும்.
அதில் நாம் நமது போன் நம்பரை என்டர் செய்த பின்பு வெரிஃபிகேஷன் கோட் நமது மொபைலுக்கு சில சமயம் வருவதில்லை. அது வருவதற்கு சில மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.
சரி வெரிஃபிகேஷன் கோடு வரவில்லை என்றால் அதாவது நமது மொபைலுக்கு ஓடிடி நம்பர் வரும் அதன் மூலம் நமது வாட்சப் செயலியை மறுபடியும் உபயோகிக்க முடியும். அப்படி ஓ டி பி நம்பர் வரவில்லை என்றால் அதற்கு கீழேயே கால் மீ என்கிற இன்னொரு வசதி உள்ளது அதை கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய மொபைல் கால் வெரிஃபிகேஷன் ஆட்டோமேட்டிக்காக செயல்படும்.
இதன் மூலமும் நமது மொபைல் வாட்சப் வெரிஃபிகேஷன் நடக்கும். அதன்பின்பு நமது வாட்சப் செயலியை உபயோகப்படுத்த முடியும்.இந்த செயல்முறையில் வெரிஃபிகேஷன் கோடும் அல்லது கால் மீ ஆப்ஷனும் வேலை செய்யவில்லை என்றால்.
அதற்கு என்ன செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் உங்களது ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் (RESTART ) செய்து விட்டு அல்லது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள்., இதில் சரியாகவில்லை என்றால்
உங்கள் மொபைலில் உள்ள வாட்சப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து விட்டு மறுபடியும் இன்ஸ்டால் செய்து மறுபடியும் முயற்சித்துப் பாருங்கள் இதுவும் சரியாகவில்லை என்றால்
உங்கள் மொபைலில் நெட்வொர்க்கை உபயோகிக்காமல் வைஃபை மூலம் வேறு ஒரு சாதனத்தின் மூலம் இணைய சேவையை இணைத்து இந்த வழிமுறையில் முயற்சித்துப் பாருங்கள்., இதிலும் சரியாகவில்லை என்றால்
உங்கள் மொபைல் செட்டிங்ஸ் சென்று நெட்வொர்க் செட்டிங்ஸில் ரோமிங் என்கிற வசதி ஆப்பில் உள்ளதா இல்ல அல்லது ஆன் செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள். அது ஆப்பில் இருந்தால் உடனே ஆன் செய்யுங்கள் ஆண் செய்து விட்டு மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள் இதுவும் சரியாகவில்லை என்றால்.
வாட்சப்பில் வந்துள்ள புதிய அப்டேட் PASSKEY
மறுபடியும் மொபைல் செட்டிங்ஸ் உள் சென்று ஆல் ஆப்ஸ் என்ற வசதியை தேர்ந்தெடுக்கவும்., அதில் வாட்சப்பை தேர்ந்தெடுத்து அதை ஓபன் செய்யவும் அதில் கிளியர் ஸ்டோரேஜ் மற்றும் கிளியர் கேட்ச் அனைத்தையும் கிளியர் செய்யவும் செய்துவிட்டு., பர்மிஷன் பகுதியில் கால்ஸ் மற்றும் எஸ் எம் எஸ் ஆகியவற்றில் அலௌ என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
இப்பொழுது கூகுள் பிளே ஸ்டோரில் சென்று உங்கள் whatsapp அப்டேட் கேட்கின்றதா என்பதை பார்க்கவும்.அப்டேட் கேட்டால் உங்கள் வாட்சப்பை அப்டேட் செய்துவிட்டு மறுபடியும் முயற்சித்து பாருங்கள். இந்த வழிமுறையும் சரியாகவில்லை என்றால்.
நீங்கள் உங்கள் போன் நம்பரை என்டர் செய்த பின் அதில் தோன்றும் பிராப்ளத்தை ஸ்கிரீன் சாட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
போன் நம்பர் என்டர் செய்யும் பக்கத்தில் அதாவது!, வெரிஃபிகேஷன் கோடு பகுதியில் மேலே 3 புள்ளிகள் காணப்படும். அதை கிளிக் செய்தால் ஹெல்ப் என்ற ஒரு ஆப்ஷன் வரும் அதனை கிளிக் செய்யவும். இதில் கீழே பச்சை நிற பெட்டியில் this doesnt answer question என்று காணப்படும் இதை கிளிக் செய்யவும்.
அதன் பின்பு வரும் பக்கத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சினையை ஆங்கிலத்தில் டைப் செய்யவும். (Ex :despite trying many times I am not getting verification code by sms verifying my number on WhatsApp)
உங்கள் தகவல்கள் திருடப்படலாம் பழைய போன்களை வாங்கும் போதும் விற்கும் போதும் கவனிக்க வேண்டியவை
அதன் பின்பு நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். அடுத்த பக்கத்தில் பல கேள்விகளும் அதற்க்கான பதில்களும் இருக்கும்.
கடைசியாக இருக்கும் this doesnt answer my question கீழே உள்ள பச்சை கலரில் உள்ள அந்த ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
இது ஈமெயில் முகவரியில் இருந்து வாட்சப் இணையதளத்திற்கு உங்களுடைய கேள்விகள் மற்றும் இதனுடன் நீங்கள் ஸ்கிரீன் சாட் எடுத்ததையும் சேர்த்து அனுப்பவும். அதன் பின்பு உங்களது வாட்சப் செயலியில் போன் நம்பரை இணைத்து வெரிஃபிகேஷன் கோட் வருகிறதா என்பதை சரி பார்க்கவும்.
இந்த வழிமுறையில் உங்களுக்கு பயன் கிடைத்தால் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ளவும் மேலும் வாட்சப் தகவல்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
Post a Comment