உங்கள் தகவல்கள் திருடப்படலாம்பழைய போன்களை வாங்குவதாக இருந்தாலும் அல்லது விற்பதாக இருந்தாலும் |Whether you are buying or selling old phones, your information can be stolen.

 உங்கள் தகவல்கள் திருடப்படலாம்



நீங்கள் உங்களுடைய பழைய போன்களை விற்பதாக இருந்தாலும் அல்லது அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து பழைய போன்களை வாங்குவதாக இருந்தாலும் சரி.,  இதை செய்யாமல் வாங்காதீர்கள் அல்லது விற்காதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் உபயோகித்த மொபைலில் சோசியல் மீடியா அக்கவுண்ட் ,மெயில் ஐடி, வங்கி கணக்கு,பாஸ்வேர்ட் போன்ற  விவரங்கள் உங்கள் மொபைலில் சேவ் ஆகியிருக்கும்.

நீங்கள் சாதாரணமாக போனை ரீசெட் (RESET ) செய்தால் மட்டும் போதாது.
அணைத்து தகவல்களையும் அழிப்பதற்கு., ரீசெட் செய்ய நீங்கள் மொபைல்  செட்டிங்கில் உள்ளே சென்று செய்யப்படும் ரீசெட்டில் அனைத்தும் நீக்கப்படாது.

அதற்கு ஹார்ட் ரீசெட் (HARD RESET ) செய்யவேண்டும். இதை செய்ய பவர் பட்டன் மற்றும் வால்யூம் அப் அல்லது வால்யூம் டவுன் பட்டனையும்(POWER+VOLUME UP or POWER+VOLUME DOWN) ஒரே சமயத்தில் சில நொடிகள் வரை  அழுத்தி பிடித்திருந்தால் அந்த மொபைலின் மென்பொருள் (SOFTWARE) பகுதி திறக்கப்படும். அதில் சென்று பேக்டரி ரீசெட் (FACTORY RESET) கொடுக்கவும். இந்த வழிமுறை ஒவ்வொரு மாடல் போனிற்கும் மாறுபடும்.

இதை மட்டும் செய்தால் போதும் என்று அப்படியே விட்டு விடாதீர்கள். இன்னும் முழுமையாக அழிப்பதற்கு ஃப்ளசிங் (FLASHING) அல்லது சாஃட்வ்ர் ரீஇன்ஸ்டால் (SOFTWARE REINSTALL) செய்யவும். இது மொபைல் சர்விஸ் சென்டரில் செய்வார்கள்.



அதனால் உங்கள் மொபைலை அருகில் இருக்கும் சர்விஸ் சென்டரில் கொடுத்து முழுவதுமாக ஃப்பார்மட் (FARMAT) செய்யவும்.

இப்படி செய்யவிட்டால் உங்கள் போனை ரிக்காவேரி (RECOVERY) செய்து அழித்த தகவல்களை எளிதில் எடுக்க மீண்டும் வாய்ப்புள்ளது. இதற்கான ரிக்காவேரி செய்வதற்கான  சாப்ட்வேரும்  உள்ளது.

அதேபோல் நீங்கள் ஒருவரிடம் இருந்து வாங்கும் பழைய போனை இதே மாதிரி செய்துவிட்டு உபயோகிக்கவும்.
ஏனெற்றால் ஒரு போனை ஹேக் செய்வதற்கான செயலி அதாவது ஒருவருடைய மொபைலின் கேமெரா,மைக்கை  இன்னொரு சாதனத்தில் இருந்து இயக்க முடியும்.



இதற்கான செயலி (APPS) பிளே ஸ்டோரில் (PLAY STORE) உள்ளது. அந்த செயலியை போனில் மறைத்து வைக்ககூடிய செயலியும் உள்ளது. இதில் இருந்து உங்கள் தகவல்களை பாதுகாக்க போனை முழுவதுமாக ஃப்ளசிங் (FLASHING) செய்தால் மட்டுமே முழுமையாக நீங்கும்.

இதுபோன்ற முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள யுடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

 MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇





கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.