நமது போனில் இடது புறம் தெரியும் கூகுள் செய்தி பக்கத்தை எப்படி நீக்குவது|Turned of discovery mode on left swipe of home page in our smartphone

 நமது போனில் இடது புறம் தெரியும் கூகுள் செய்தி பக்கத்தை எப்படி நீக்குவது


MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME

நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் ஃபோன்களில் எண்ணற்ற வசதிகள் மற்றும் அதில் உள்ள அமைப்புகள் அதில் உள்ளவற்றை அனைத்தையும் நம்மில் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ஆனால் அதில் இருக்கும் அமைப்புகளை பற்றி நாம் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.

ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள சில அமைப்புகள் சில சமயம் சிலருக்கு அந்த வசதி விருப்பம் இல்லாதவைகளாக இருக்கக்கூடும்
அந்த வசதிகளை அந்த அமைப்புகளை நாம் எப்படி மாற்றுவது அல்லது எப்படி அதை நீக்குவது என்பதே தெரியாமலே நாம் நமது ஃபோன்களை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.
📲
அந்த வகையில் நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் ஃபோன்களின் ஹோம் பேஜ் (HOME PAGE) பக்கத்தை வலது புறமாக தள்ளினால் இடது புறம் கூகுள் நியூஸ் பீட் (GOOGLE NEWS FEED) காண்பிக்கப்படும். இதில் சில செய்திகள் நமக்கு உபயோகமானதாக இருக்கும் இது பல பேருக்கு பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும் இந்த கூகுள் செய்தியில் நமக்கு பிடித்தமான சில செய்திகளை இதில் பார்க்கலாம்.


இந்த ஹோம் ஸ்க்ரீன் பக்கம் பல பேருக்கு பிடித்திருந்தாலும் சில பேருக்கு இது பிடிக்காமல் இருக்கக்கூடும் இந்த ஹோம் ஸ்கிரீன் பக்கத்தை எப்படி நீக்குவது அல்லது அதை எப்படி அந்த செய்தி தெரியாமல் வைப்பது என்று அதைப்பற்றி அறியாமல் இருப்பவர்கள் அந்த அமைப்பை எப்படி நமது போனில் நிர்வாகிப்பது என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

உங்கள் போனின் ஹோம் பேஜ் பக்கத்தை வலது புறமாக தள்ளினால் இடது புறம் கூகுள் செய்திகள் காண்பிக்கப்படும் இதில் மேலே வலது புறம் ஓரத்தில் உங்களுடைய முகப்பு(PROFILE LOGO PICTURE) படம் காண்பிக்கப்படும் அதை தேர்வு செய்தால்.
சில அமைப்புகள் வசதிகள் அதில் தோன்றும். அதில் கீழே பார்த்தால் செட்டிங்ஸ் (SETTING) என்றொரு வசதி இருக்கும் அதனை கிளிக் செய்தால் ஜெனரல் (GENERAL) என்று முதலில் இருக்கும் இந்த வசதியை தேர்வு செய்யவும்.
பின்பு அதில் காணப்படும்.டிஸ்கவர் (DISCOVERED) எனப்படும் அமைப்பை நீங்கள் ஆப் (OFF)செய்வதன் மூலம் இடது புறம் தெரியும் google நியூஸ் பக்கத்தை நாம் நிறுத்தி வைக்கலாம்.

இதை விருப்பமுள்ளவர்கள் இந்த வழிமுறையை பின்பற்றலாம்., தேவைப்படும் பொழுது மறுபடியும் இதை மாற்றி அமைக்கலாம்.



ஆனால் இந்த கூகுள் நியூஸ் வசதி மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது. நமக்கு தேவையான அல்லது நமக்கு உபயோகமான சில செய்திகளை இங்கு நாம் பார்க்க முடியும் படிக்க முடியும் இந்தப் பக்கத்தில் மீது விருப்பம் இல்லாதவர்கள் இதனை தற்காலிகமாகவும் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

இதுபோன்ற நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் ஃபோன்களின் உள்ள அமைப்புகள் பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள ஏ டூ இசட் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் (A2Z THAKAVAL) செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.