இனி ஒருமுறை மட்டும்தான் கேட்க முடியும் வாட்சப்பில் வந்துள்ள புதிய அப்டேட் | new update in WhatsApp once viewed audio message

இனி ஒரு முறை மட்டும்தான் கேட்க முடியும் வாட்சப்பில் வந்துள்ள புதிய அப்டேட்

வாட்சப்பில் சில வாரங்களாக தொடர்ந்து புதிய புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது மேட்டா நிறுவனம்.

பயனாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அவர்கள் தொடர்ந்து whatsapp செயலியை உபயோகப்படுத்தவும் பயனாளர்களுக்கு பிடித்தமான சில விஷயங்களை அதில் அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது.

இன்று அதிகபட்சமாக எல்லோரிடத்திலும் ஸ்மார்ட் போன் உள்ளது அப்படி ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அவர்களுக்கென்று தனியாக ஒரு மெயில் ஐடியும் உள்ளது. அதுபோலவே ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களும் மெயில் ஐடியை போல் whatsapp செயலியையும் அதில் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

இப்படிப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாடுகளை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
whatsapp செயலியில் வந்துள்ள புதிய அப்டேட் பற்றி பார்ப்போம்

இதற்கு முன் நாம் ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு புகைப்படத்தை அனுப்பினாலோ அல்லது எழுத்து வடிவில் ஆன மெசேஜ் அனுப்பினாலோ அல்லது வீடியோ போன்று காணொளி அனுப்பினாலோ அதை பெறுபவர்கள் ஒரு முறை மட்டும் பார்க்கும்படி நாம் அனுப்பலாம்

அப்படி அனுப்பப்பட்ட தகவல்கள் அவர்களது டிவைஸில் சேமிக்கப்படாது மறுபடியும் நாம் அனுப்பிய செய்திகளை அவர்களால் காண இயலாது இதுபோல் நாம் ஒருவருக்கு ஒரு செய்தியை பகிரலாம்.

இது ஏற்கனவே வந்த ஒரு அப்டேட். இந்த அப்டேட்டில் புதியதாக ஆடியோ மெசேஜ் ஐயும் இணைத்துள்ளனர்.


இனி நாம் ஒருவருக்கு அனுப்பும் ஆடியோ மெசேஜை அவர் ஒருமுறை மட்டும் கேட்கும்படி அனுப்பலாம் அவர் கேட்ட பின்பு மறுபடியும் அதைக் கேட்க முடியாது அப்படி ஒரு அப்டேட் தான் இப்பொழுது whatsapp வழங்கி உள்ளது.
அப்படி அனுப்பப்பட்ட ஆடியோ அவர்களது ஃபோனில் சேமிக்கப்படாது.

இந்த அப்டேட் மிகவும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பு உடையதாகவும் கருதப்படுகிறது.

(ஒருமுறை மட்டும் கேட்கும்படியாக ஆடியோ செய்தியை எப்படி அனுப்புவது) :👉CLICK 

நாம் ஒருவருக்கு அனுப்பப்படும் விளையாட்டான செய்தி அது தேவையில்லாமல் பகிரப்படுவதை இதனால் தடுக்கப்படுகிறது.

மேலும் இதுபோல் வாட்ஸ் அப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டுகளை வீடியோவாக காண எங்கே கிளிக் செய்யவும். CLICK 


கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.