ஸ்மார்ட்போனில் உள்ள ஃபிளைட் மோடின் மூன்று நன்மைகள்
தினந்தோறும் நாம் நமது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனை மணி கணக்கில் அதிலேயே மூழ்கி இருப்போம்.
ஆனாலும் நமது ஸ்மார்ட் போனில் உள்ள நமக்குத் தெரியாமல் சில வசதிகள் உள்ளது.
அந்த வசதிகளை நாம் பயன்படுத்தாமல் இருந்திருப்போம் காரணம் அதைப்பற்றிய விவரம் நமக்கு தெரியாததால்.
ஸ்மார்ட் போனில் ஏரோபிளேன் மோடு என்னும் வசதி உள்ளது இது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.
இந்த பிளைட் மோடு ! நாம் விமானத்தில் பயணிக்கும் பொழுது மட்டுமே பயன்படுத்துவோம். அதற்க்கு மட்டும்தான் இது பயன்படுகிறது என்று அனைவருமே யோசித்து இருப்போம்.
ஆனால் இந்த பிளைட் மோடினால் சில நன்மைகளும் உள்ளது, நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட்போனுக்கு.
அப்படி என்னன்னா நன்மைகள் உள்ளது என்று பார்ப்போம்.
பொதுவாக நாம் வெளியில் செல்லும் பொழுது நமது மொபைலின் பேட்டரியில் சார்ஜ் குறைவாக இருந்தால்., சிறிது நேரம் கழித்து ஒருவருக்கு அழைப்பை மேற்கொள்ளவதாக இருந்தால்., ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு ., அழைப்பை மேற்கொள்ளும் பொழுது ஆன் செய்து கொள்ளலாம் என்றிருப்போம்.
இப்படி செய்வதால் , பேட்டரியில் உள்ள சார்ஜ் இன்னும் வேகமாக குறைய வாய்ப்புண்டு.ஏன் என்றால் !, ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மீண்டும் ஆன் செய்யும்பொழுது அதிகமான சக்தியை எடுத்து கொள்ளும். இதனால் இன்னும் சார்ஜ் குறைய வாய்ப்புண்டு.
இந்த சமயத்தில் உங்கள் மொபைலை பிளைட் மோடில் போட்டுவிட்டால் சார்ஜ் குறைவதை தடுக்க முடியும்.
பிளைட் மோடில் இருக்கும் பொழுது இன்டர்நெட் மூலம் இயங்கும் எந்த ஒரு செயலியும் இயங்குவது தடைபடும்.
நாம் மொபைலை உபயோகப்படுத்தாமல் இருக்கும் பொழுது சார்ஜ் குறைவதற்கு இதுவே கரணம்.
ஒவ்வொரு செயலியும் தானாகவே பின்புலத்தில் (
BACKROUND ) இயங்கும்.
இதனால்தான் பட்டன் மொபைலில் இரண்டு நாட்கள் 3 நாட்கள் வரை சார்ஜ் நீடித்து இருக்ககும். காரணம் - பட்டன் மொபைலில் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள செயலிகள்போல் இருப்பது இல்லை.
நீங்கள் மொபைலை சார்ஜ் போடும் பொழுது இதேபோல் பிளைட் மோடில் போட்டுவிட்டு சார்ஜ் போடுங்கள் சாதாரணமாக ஏறும் சார்ஜ் விட விரைவாக சார்ஜ் ஏறும். இதுவும் முதலில் சொன்னது தான். இன்டர்நெட் மூலமாக இயங்கும் எந்த ஒரு செயலையும் இயங்குவது தடைபடும், நீங்கள் இன்டர்நெட்டை ஆப் செய்துவிட்டு வைக்கலாமே என்று நினைக்கலாம்.
ஆனால் இன்டர்நெட்டை ஆப் செய்துருந்தாலும் அந்த செயலிகள் இன்டர்நெட்டுக்காக தூண்டுதலாகவே இயங்கும். அதனால்தான் நீங்கள் இன்டர்நெட் ஆன் செய்தவுடன் உங்களுக்கு அனுப்பப்பட்ட செய்திகள் உடனடியாக நோட்டிபிகேஷனாக வரும்.
அடுத்ததாக இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருந்தாலோ அல்லது நெட்ஒர்க் சிக்னல் விட்டுவிட்டு வந்தாலோ., நீங்கள் பிளைட் மோடில் 10 செகண்ட்ஸ் போட்டு விட்டு பின்பு தொடர்பை ஏற்படுத்தி பாருங்கள் .
இன்டர்நெட் கிடைப்பதிலும், சிக்னல் ஸ்ட்ரென்த் பிரச்னை குறைய வாய்ப்புண்டு.
MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇
Post a Comment