இந்த அப்டேட் வாட்ஸ் அப்பில் உங்களுக்கு வந்து இருக்கா New update instant video message in WhatsApp Full information Tamil
வாட்ஸ் அப்பில் வந்துள்ள புதிய அப்டேட் உங்களுக்கு வந்துள்ளதா என்பதை இப்பொழுதே பாருங்கள்
whatsapp பயனாளர்கள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் வேளையில் வாட்ஸ்சப் பயனாளர்கள் பயன்படும்படி நாள்தோறும் புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது மேட்டா நிறுவனம்
வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியை எளிதாகவும், பயன்படும்படி கையாள்வதற்கும் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது
இப்பொழுது வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வசதி.
நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும்பொழுது அதில் ஆடிய மெசேஜ் அல்லது டெக்ஸ்ட் வழியாக நாம் செய்திகளை பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
ஒரு வீடியோவை நாம் அனுப்புவதாக இருந்தால் அதை முதலில் நமது போனில் கேலரியில் உள்ள வீடியோக்களை பின் செய்து அனுப்புவோம்
.
இனிமேல் அப்படி அனுப்ப தேவையில்லை. எப்படி நாம் ஆடியோ மெசேஜ் அனுப்பி வந்தோமோ அது போல் இனிமேல் வீடியோ மெசேஜ் என்னும் புதிய வசதியை பயன்படுத்தி 60 நொடிகள் உள்ள வீடியோக்களை நாம் சாட் (CHAT) பகுதியிலேயே ரிக்கார்ட் செய்து அனுப்பிக் கொள்ளலாம்.
இப்படி ஒரு புதிய வசதியை மேட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதனால் நாம் வாட்ஸ்அப் பயன்படுத்துவது மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் ஒருவருக்கு வீடியோ அனுப்பும்பொழுது முதலில் அதை ரெக்கார்ட் செய்துவிட்டு அதன் பிறகு தான் whatsapp செயலியை ஓபன் (OPEN ) செய்து அதன்மூலம் அனுப்ப வேண்டி இருந்தது.
இனி அந்த சாட் பகுதியிலேயே நாம் வீடியோவை ரெகார்ட் செய்து ஒருவருக்கு அனுப்பி நமது செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.
இதை நாம் எப்படி அனுப்புவது மற்றும் நமது வாட்ஸ் அப் செயலியில் இந்த அப்டேட் வந்துள்ளதை எப்படி கண்டறிவது என்பது பற்றிய முழு விவரம் கீழே
முதலில் உங்கள் வாட்சப் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு உங்கள் வாட்சப் செயலியின் செட்டிங்க் பகுதிக்கு சென்று சாட் என்கின்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
அதில் இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் பட்டனை ஆன் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒருவருக்கு செய்தி அனுப்பும் பகுதியில் கீழே மைக் லோகோ காணப்படும்
அதை ஒரு முறை தொட்டால் வீடியோ லோகோவாக மாறும்
அதன் பின்பு ஆடியோ மெசேஜ் அனுப்புவது லாங்க் பிரஸ் செய்து மேலே தள்ளினால் வீடியோ ரிக்கார்ட் ஆகா ஆரம்பிக்கும்.
அதில் முன் கேமெரா பின் கேமெரா இரண்டையும் ஒரே சமயத்தில் இயக்கலாம்.
அதிக பட்சம் 60 நொடிகளுக்கு வீடியோ ரெகார்ட் செய்து அனுப்பலாம்.
இதன் முழு விவரத்தையும் விடியோவாக காண 👇
இதுபோல் வாட்ஸ் அப்பில் வரும் அனைத்து புதிய அப்டேட்டுகளையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள யூடுப் சேனலை சப்ஸ்கிரைப் (YOUTUBE CHANNEL FOR SUBSCRIBE ) செய்து கொள்ளுங்கள்.
MORE INFORMATION ABOUT LAPTOP AND SMARTPHONE SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL👇
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
Post a Comment