வாட்சப்பில் வந்துள்ள இரண்டு புதிய வசதிகள் | WhatsApp New two update video chat and new contacted saved in whatsapp
வாட்சப்பில் வந்துள்ள இரண்டு புதிய வசதிகள்
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
வாட்ஸ்ஸப்பில் அடுத்தடுத்து புதிய வசதிகள் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது மேட்டான (META) நிறுவனம்
நாம் தினமும் கண்ணாடியில் முகத்தை பார்க்கிறோமோ இல்லையோ ஆனால் காலையில் எழுந்தவுடன் நமது கையில் ஸ்மார்ட்போன் அதில் வாட்சப்பும் கண்டிப்பாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருப்போம்.
whatsapp பயனாளர்கள் அதிகரித்துக் கொண்டே போகும் இந்த தருணத்தில் அவர்கள் வாட்ஸ்ஸப்பை எளிதாக பயன்படுத்தவும் சிரமம் இல்லாமல் உபயோகிக்கவும் மேட்டா நிறுவனம் whatsapp செயலியில் புதிய புதிய அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது.
இந்த வகையில் நாம் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவதாக இருந்தால் அந்த நம்பரை முதலில் நமது செல்போனில் சேவ் (SAVE) பண்ணிவிட்டு அதன் பிறகு தான் நாம் வாட்ஸ் அப்பில் அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.
ஆனால் இப்பொழுது புதிய அப்டேட்டில் நமது whatsapp செயலியில் ஒரு போன் நம்பரை நாம் சேவ் பண்ணி வைத்துக் கொள்ள முடியும் இதனால் நாம் நமது செல்போனில் ஒரு நம்பரை சேவ் செய்துவிட்டு பிறகு வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ண தேவையில்லை நேரடியாக வாட்ஸ் அப்பில் நம்பரை நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம் இப்படி ஒரு புதிய வசதியை whatsapp நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
a2z WhatsApp all updates CLICK
அடுத்ததாக வாட்ஸ்ஸப் செயலியில் (app) அப்டேட் செய்யப்பட்டுள்ள வசதி என்னவென்றால் இதற்கு முன் நாம் ஒருவருக்கு ஆடியோ மெசேஜ் அனுப்புவது போல் இனி வீடியோ மெசேஜும் நாம் அனுப்பலாம் அதற்கான அப்டேட் தான் இப்பொழுது வழங்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு நாம் மெசேஜ் அனுப்பும் பொழுது கீழே மைக் (MIC) சிம்பிள் இருக்கும் அந்த மைக் சிம்பல் நீண்ட நேரம் அழுத்தினால் (LONG PRESS) அது வீடியோ சிம்பிளாக மாறும் வீடியோ சிம்பிளாக மாறிய பின் மேலே ஸ்வைப் (SWIPE) செய்தால் வீடியோ ரெக்கார்ட் ஆக தொடங்கும். 60 செகண்ட்ஸ்க்கு இந்த வீடியோ ரெக்கார்ட் ஆகும்
ஆடியோ அனுப்புவது போல் இனி வாட்ஸ்ஸப்பில் வீடியோ சாட்டும் (CHAT) செய்து கொள்ளலாம்
இந்த அப்டேட் பெரும்பாலான whatsapp செயலியில் இன்னும் வரவில்லை முதலில் பீட்டா வெர்சனில் (BETA VERSION ) தான் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் வாரங்களில் இந்த வசதி அனைத்து நார்மல் whatsapp களுக்கும் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment