வாட்சப்பில் இந்த செட்டிங்க்ஸை ஆன் செய்ய மறந்து விடாதீர்கள் | Very important setting in WhatsApp | WhatsApp advanced setting full details tamil
வாட்சப்பில் இந்த செட்டிங்க்ஸை ஆன் செய்ய மறந்து விடாதீர்கள்
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
வாட்ஸ்ஸப்பில் அவ்வப்பொழுது பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது
whatsapp பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வரும் வேளையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சில மாற்றங்களை whatsapp செயலியில் (APP) அந்நிறுவனம் அமைத்துக் கொண்டு வருகிறது
அப்படியொரு முக்கியமான செட்டிங்க்ஸை உருவாக்கியுள்ளது
whatsapp செட்டிங்ஸ் அமைப்பிற்கு சென்றால் அங்கு பிரவேசி (PRIVACY) என காணப்படும் செட்டிங்ஸில் கீழே அட்வான்ஸ் (ADVANCED) செட்டிங்ஸ் என்று புதியதாக ஒரு அமைப்பு காணப்படும்
அதை தேர்வு செய்தால் அடுத்ததாக ஒரு பொத்தான் (BUTTON) இருக்கும் அதை ஆன் செய்து கொண்டால்., நீங்கள் whatsapp மூலமாக மற்றொருவரை வீடியோ கால் மூலம் அழைக்கும் பொழுதும் அல்லது வாய்ஸ் கால் மூலம் அழைப்புகளை மேற்கொண்டாலும் உங்கள் இன்டர்நெட் முகவரியை மற்றவர்கள் எளிதில் பார்க்க முடியாத அளவிற்கு இந்த அமைப்பானது தடுக்கிறது.
இதை ஆன் செய்து வைத்துக் கொண்டால் உங்கள் ஐபி முகவரியை யாராலும் மறைமுகமாக தொடர்பு கொள்ள முடியாது
whatsapp பயனாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது
இந்த செட்டிங்ஸை உங்களது whatsapp செயலியில் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதில் இருக்கும் சிறு குறைபாடு என்னவென்றால் இதை நீங்கள் ஆன் செய்வதால் நீங்கள் மேற்கொள்ளும் வீடியோ கால்கள் தரம் சற்று குறைவாக காணப்படும் என்று வாட்ஸ்ஸப் நிறுவனம் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாம் எந்த செயலியையும் (APP) உபயோகிக்கும் பொழுது அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இப்பொழுதே இந்த செட்டிங்க்ஸை ஆன் செய்துகொள்ளுங்கள்.
இந்த தகவலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 👇
Post a Comment