Tamilnadu govt free lenovo windows 10 laptop settings accounts sign in options dynamic lock details tamil
நீங்கள் உபயோகிக்கும் தமிழ்நாடு அரசு கொடுத்த இலவச மடிக்கணினியில் தானாகவே LOCK செயல் முறையை எவ்வாறு அமைப்பது
நீங்கள் கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது., அதை லாக் (LOCK) செய்யமல் அவசரமாக வெளியே சென்றுவிட்டால்.
உங்கள் அனுமதி இல்லாமல் அதை வேறு ஒருவர் பார்க்க நேரிடும்.
இதை தடுப்பதற்கு உங்கள் கணினியில் தானாகவே லாக் (LOCK) ஆக்கிக்கொள்ளும் ஒரு அமைப்பு (SETTING) உள்ளது. நீங்கள் உபயோகிக்கும் கைபேசி (SMARTPHONE) மூலம் இதனை அமைக்கலாம்.
இதனை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான செயல் முறைதான் இது.
உங்கள் கைபேசியிலும் கணினியிலும் ப்ளூடூத் (BLUETOOTH) ஆன் செய்து இரண்டையும் இணைக்கவும்.
பின்பு உங்கள் கணினியில் விண்டோஸ் ஐகானை கிளிக் (WINDOWS ICON CLICK)செய்யவும்
அதில் இடது புறம் கீழே உள்ள செட்டிங் ஐகானை கிளிக் (CLICK ICON) செய்யவும்
அதன் பின்பு அக்கவுண்ட்ஸ் கிளிக் (CLICK ACCIUNTS) செய்யவும்
இப்பொழுது இடது புறம் சைன் இன் ஆப்ஷனை கிளிக் (CLICK SIGN IN OPTIONS) செய்யவும்
அடுத்ததாக வலது புறம் கீழே பார்த்தால் டைனமிக் லாக் (DYNAMIC LOCK) என்று காணப்படும்., அதற்கு கீழ் சிறியதாக ஒரு சதுர வடிவில் பெட்டி போன்ற அமைப்பில் கிளிக் (CLICK BOX TIK MARK) செய்யவும்.
இப்பொழுது நீங்கள் உங்கள் கைபேசியை எடுத்துக்கொன்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் உங்கள் கணினி தானாகவே லாக் ஆக்கிக்கொள்ளும்.
இந்த செயல்முறையை வீடியோவாக காண 👉 CLICK
இது போன்ற கணினி சம்பந்தமான தகவல்களுக்கு எங்களுது YOUTUBE சேனலை சப்ஸ்கிரைப் (SUBSCRIBE)செய்து கொள்ளுங்கள்.
Post a Comment