How to find left and right in the earphone we use | நாம் உபயோகிக்கும் earphone ல் இடது வலது எப்படி கண்டுபிடிப்பது

நாம் உபயோகிக்கும் earphone ல் இடது வலது எப்படி கண்டுபிடிப்பது


நாம் உபயோகிக்கும் கெட்செட் , இயர்போன் (HEADSET , EARPHONE) இதில் வலது புறம் எது, இடது புறம் எதுவென்று தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.


எதற்க்காக தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்., என்று பல பேரிடம் கேள்விகள் எழலாம்.

வலது இடது இதை மாற்றி காதில் பொருத்தினால்   என்ன?., பாடல் ,இசை கேட்கத்தானே செய்யும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
உண்மைதான்!., 

எப்படி மாட்டிக்கொண்டு கேட்டாலும் கேட்கத்தான் செய்யும். ஆனால் சரியான முறையில் காதில் பொருத்தினால் மட்டும் அந்த சவுண்ட் (SOUND) குவாலிட்டியை (QUALITY ) நாம் அனுபவிக்க முடியும்.


உதாரணமாக!., நீங்கள் திரையரங்கில் ஒரு திரைப்படம் பார்க்கிறீர்கள் என்றால்., அந்த படத்திற்கு டி.டி.எஸ் டால்பி டிஜிட்டல் சவுண்ட் எபெக்ட் கொடுத்திருக்கிறார்கள் என்றால்., அந்த படத்தை பார்க்கும் பொழுது அந்த காட்சியில் வலது புறத்தில் ஒரு வாகனம் செல்கிறது என்றால்?.., 


வலது புறம் உள்ள ஸ்பீக்கரில் அந்த வாகனத்தின் சத்தம் கேட்கும். இடது புறத்தில் அந்த வாகனத்தின் சத்தம் பெரிதாக கேட்காது. இப்படி திரையில் தோன்றும் காட்சிகளுக்கு ஏற்றாற்போல் அந்த சத்தத்தை நமக்கு பிரித்து ஒலிக்க செய்வதுதான் இந்த தொழில்நுட்பம்.

இந்த தொழில்நுட்பத்தை  நீங்கள் மொபைலில் பார்க்கும் பொழுது., அந்த உணர்வை நீங்கள் கேட்க வேண்டும் என்றால். நீங்கள் சரியான முறையில் காதில் பொருத்தியிருந்தால் மட்டுமே உணர முடியும்.

பல கெட்செட்,இயர்போனில் வலது இடது அடையாளப்படுத்தியிருக்கும்.
 சில வகைகளில் இது அதில் குறிப்பிடாமல் இருக்கும்.
அப்படி உள்ள கெட்செட்களில் எப்படி நாம் தெரிந்து கொள்வது.


அதற்க்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து அந்த விடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

முக்கியமாக!
இந்த விடியோவை பார்க்கும் பொழுது கெட்செட் மாட்டிக்கொண்டு பார்க்கவும்.
சாதாரணமாக பார்த்தால் அதன் சவுண்ட் நார்மலாகத்தான் இருக்கும்.
கெட்செட் பொருத்திக்கொண்டு பார்த்தால்தான்  அந்த சவுண்ட் குவாலிட்டியை உங்களால் உணர முடியும். வீடியோ லிங்க் 👇👇👇 
  

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.