இந்த மெசேஜ் எப்படி நிறுத்துவது | how to stop flash message IN ANY NETWORK Tamil
மொபைலில் வரும் இந்த பிளாஸ் மெஸேஜ் எப்படி நிறுத்துவது
நீங்கள் புதிதாக மொபைல் வாங்கினாலும் அல்லது புதிதாக சிம் வாங்கி உங்களது ஸ்மார்ட் போனில் இன்சர்ட் செய்யும் பொழுது உங்களுக்கு இந்த மாதிரியான பிளாஸ் மெசேஜ் அடிக்கடி வரும்.
இதை நீங்கள் கேன்சல் செய்தாலும் 15 நொடி அல்லது 30 நொடிக்கு ஒரு முறை இந்த பிளாஷ் மெசேஜ் வந்து கொண்டே இருக்கும்.
அந்த மெசேஜில் நீங்கள் ஓகே பட்டனை அழுத்தினால் பிளே ஸ்டோர் அல்லது அந்த நெட்வொர்க்கின் அபிஷியல் வெப்சைட் ஓபன் ஆகும்.
அதில் நீங்கள் எந்த சிம் மாற்றி இருந்தீர்களோ அந்த சிம்மிற்க்கான அபிசியால் மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சொல்லும்.
இந்த பிளாஷ் மெசேஜை எப்படி நிறுத்துவது?.
: இதற்கு உங்கள் மொபைலில் சிம் டூல் என்கின்ற ஆப் இருக்கும்.
: அதை கிளிக் செய்து ஓபன் செய்யுங்கள்.
: அதன் பிறகு அதில் ஃப்ளாஷ் என்று காணப்படும் அதை கிளிக் செய்யவும்.
: பின்பு அதில் தோன்றும் சில ஆப்ஷன்களில் ஆக்டிவேஷன் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
: அதன் பிறகு டி ஆக்டிவேட் என்பதை கிளிக் செய்யவும்.
: அதன் பிறகு தோன்றும் பாப் அப் மெசேஜில் ஓகே பட்டனை அழுத்தவும்.
இந்த செட்டிங்கை செய்து முடித்த பின்பு 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும் இதை உறுதிப்படுத்துவதற்கு.
இந்த செட்டிங்கை முழுமையாக செய்து விட்டால் உங்களுக்கு இந்த பிளாஷ் மெசேஜ் வருவது நின்றுவிடும்.
இந்த செட்டிங்கை வீடியோவாக காண கீழே கிளிக் செய்யவும். |
Post a Comment