whatsapp tricks tamil location sharing amazing advantages for women's don't miss it

 வாட்சாப் லொகேஷன் சேரிங்கில் மறைந்திருக்கும் உண்மைகள் 


உங்கள் வீட்டு பெண்கள் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமான தகவல்

நாம் உபயோகிக்கும் வாட்சாப்பில் லொகேஷன் சேர் பண்ணுவதற்கான வசதி உள்ளது.

இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
அதிலிருக்கும் பயன்கள் பற்றி ஒரு சிலருக்கு தெரியாமல் இருக்கும்.

அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். முக்கியமாக பெண்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய ஓன்று.
ஆண்களும், அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தெரிய படுத்துங்கள்.

வாட்சாப் மூலம் நாம் இருக்கும் இடத்தை நமது உறவினர்களுக்கு தெரியப்படுத்த., மெசேஜ் டைப் பண்ணும் இடத்தில ஒரு பேப்பர் பின் படம் போட்ட ஒரு ஐகான் இருக்கும்.



அந்த ஐகானை கிளிக் செய்தால் சில optionகள் காட்டும். அதில் லொகேஷனை தேர்வு செய்யவும்.





அதை தேர்வு செய்து பின் GPS OFFல் இருந்தால் அதை ON செய்யவும் 


ON செய்த பின் share live locationனை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்தபின், மூன்று நேரங்களுக்கான வசதிகள் காட்டும். அதில் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்யவும்.
அதன் பின் அதற்க்கு கீழ் பச்சை நிறத்தில் இருக்கும் SEND ICON கிளிக் செய்யவும்.




இப்பொழுது உங்கள் லொகேஷனை லைவ்வாக அவர்களால் காணமுடியும்.
இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்,எந்த இடத்தில வந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.
இதனை  தொடர்ந்து அவர்கள் காண வேண்டும் என்றால்., உங்கள் மொபைலில் இன்டர்நெட்டும்,  GPS ம் ON ல் இருக்க வேண்டும்.

இந்த வசதி உங்கள் வீட்டு பெண்கள் வேலைக்கோ அல்லது வெளியிடங்களுக்கு சென்றுவிட்டு வரும் பொழுது இரவு நேரமாகிவிட்டால்., இதை பயன் படுத்த சொல்லுங்கள்.

இதை பெண்கள் பயன்படுத்தும் பொது., லொகேஷன் ஒரே இடத்தில காட்டினால். ஓன்று அவர்கள் மொபைலில் இணையதள வசதி துண்டிக்க பட்டிருக்கும். அல்லது அவர்கள் வருவது பேருந்திலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ எதாவது பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். இதன் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறியலாம்.

இல்லையென்றால் அவர்களுக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம்.

அவர்கள் வழி தவறி சென்றால் கூட அவர்களை தொடர்பு கொண்டு தெரிய படுத்தலாம்.

லொகேஷன் சேர் பண்ணும்போது. நேரத்தை கணக்கிட்டு 15 நிமிடமா  அல்லது 1மணி நேரமா மற்றும் அதற்க்கும்  கூடுதலான நேரமா என்பதை தேர்வு செய்து அனுப்பவும்.

அப்படி தேர்வு செய்வதால், நீங்கள் அனுப்பிய  நேரத்தில் இருந்து. தற்சமயம் எந்த இடத்தில்  இருக்குகிறார்கள்  என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

அவர்கள் புறப்பட்ட இடத்தில் இருந்து வந்து சேர்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ. அதையும் தாண்டி நேரம் கடந்துவிட்டால்.,  அவர்களுக்கு எதாவது பிரச்சினை நேர்ந்திருக்கலாம்.

உடனே காலதாமதம் இல்லாமல் அவர்களுக்கு உதவலாம்.

அப்படி பெண்கள் லொகேஷனை சேர் செய்துவிட்டு இன்டர்நெட்டும், GPSம் OFF செய்யாமல் இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் அவர்கள் வருவதை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

மேலும் இதை பற்றின தகவலுக்கு உங்கள் மின்  அஞ்சலை பதிவு செய்து கமெண்ட்ஸ் செய்யவும்.

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.