வாட்ஸ் அப்பில் இந்த அப்டேட் உங்களுக்கு வந்துள்ளதா
whatsapp பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி அதன் செயலியை புதுப்பித்து கொண்டே இருக்கின்றது.
அவர்கள் அதை எளிதாக பயன்படுத்துவதற்காகவும் இன்னும் பாதுகாப்பாக உபயோகப்படுத்துவதற்காகவும் இந்த புதிய புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது whatsapp.
அப்படி புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்கு வசதிகளை பற்றி பார்ப்போம்.
Add members :
அதாவது நீங்கள் ஒரு whatsapp குழுவில் இருக்கிறீர்கள். ஆனால் அந்தக் குழுவின் அட்மின், ஓனர் வேறொருவராய் இருக்கிறார். நீங்கள் அந்த குழுவில் ஒரு மெம்பராகத் தான் உள்ளீர்கள் என்றால். உங்களுக்கு ஒரு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதாவது இந்த whatsapp குரூப்பில் உங்களுடைய நண்பர்கள் யாராவது இதில் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம் அப்படி ஒரு வசதியை இந்த whatsapp குரூப்பின் அட்மின் ஓனர் உங்களுக்கு வழங்கியுள்ளார்.
Add members to contacts :
இந்த வசதியின் மூலம் அந்த குரூப்பில் இருக்கும் நண்பர்கள் யாரும் உங்களுக்கு தெரியாதவர்களாக இருக்கலாம். இந்த நண்பர்களின் காண்டாக்ட் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் இதிலிருந்தபடியே நீங்கள் உங்களுடைய காண்டாக்டில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம் அதற்காகத்தான் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Add members tag :
நீங்கள் ஒரு whatsapp குரூப்பில் இருக்கும் பொழுது காண்டாக்ட் லிஸ்டில் நீங்கள் எடுத்துப் பார்க்கும் பொழுது உங்கள் பெயருக்கு கீழே இந்த ஒரு அப்டேட் காணப்படும்.
இந்த அப்டேட்டை எடிட் செய்வதன் உங்களைப் பற்றி இதில் நீங்கள் எழுதிக் கொள்ளலாம். இது யாராவது குரூப் ஓபன் செய்து பார்க்கும் பொழுது உங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கும். அதாவது அந்தக் குழுவில் இருப்பவர்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பவர்களாக இருக்கலாம்.
அந்த கம்பெனியில் சூப்பர்வைசர், மேனேஜர் மற்றும் சில இதர பொறுப்புகளில் இருப்பவர்கள் தங்களுடைய பெயருக்கு பின்னால் தங்களுடைய பதவியை இதில் டைப் செய்யும் பொழுது
உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் பதவியே வைத்து உங்களை அடையாளம் காணப்படுவதற்கு இது உதவியாக இருக்கும்.
அல்லது நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்., அதாவது எலக்ட்ரீசியன் வெல்டிங் அல்லது நீங்கள் ஒரு அட்வகேட்டாக இருந்தால் உங்கள் பெயருக்கு கீழே எழுதிக் கொள்ளலாம்.
இதன் மூலம் இந்த குரூப் இன்ஃபோ அதற்குள் சென்று பார்க்கும் பொழுது உங்கள் பெயர் கீழே இருந்தால்.
அவர்கள் உங்களை எளிதில் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உங்களிடம் whatsapp மூலம் மெசேஜ் ஆகவும் அவங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும்.
ஒருவருக்கு எலக்ட்ரிகல் சம்பந்தப்பட்ட வேலை ஒரு சந்தேகம் வருகிறது என்றால் அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு வசதியாக இருக்கும் உங்கள் பெயருக்கு கீழே நீங்கள் எலக்ட்ரீசியன் என்று எழுதி இருக்கும் பட்சத்தில் இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
Strict account settings :
இந்த செட்டிங்ஸை நீங்கள் ஆன் செய்வது மூலம் உங்களுடைய மொபைல் அதாவது whatsapp மிகவும் பாதுகாப்பாக நீங்கள் பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
அதாவது உங்களுக்கு தெரியாத நம்பரில் இருந்த வரும் செய்திகள் மற்றும் கால்கள் தானாகவே கட்டுப்படுத்தப்படும். அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு யாராவது ஒரு லிங்க் அனுப்பி அதன் மூலம் உங்களுடைய மொபைலை வாட்ஸப்பை ஹேக் செய்ய முடியாது, உங்களுடைய டேட்டாக்களை திருட முடியாது.
இந்த செட்டிங்ஸை நீங்கள் ஆன் செய்யும்பொழுது. இதில் இருக்கும் இன்னொரு டிஸ் அட்வாண்டேஜ் என்ன என்று பார்த்தால்.
இந்த செட்டிங்ஸ் நீங்க ஆன் செய்வதன் மூலம் நீங்கள் ஒருவருக்கு அனுப்பப்படும் செய்தியோ அல்லது பெறப்படும் செய்தியோ மிகவும் தாமதமாக வந்தடைந்து சேரும்.,
அல்லது நீங்கள் இதிலிருந்து செய்யும் ஆடியோ காலாக இருக்கட்டும் வீடியோ காலாக இருக்கட்டும் அதனுடைய பெர்பார்மன்ஸ் மற்றும் குவாலிட்டி தரம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று இந்த செட்டிங்ஸ்லயே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதைப் பற்றிய முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.👇🎬
மேலும் இதுபோல் வாட்ஸ் அப்பில் வரும் அப்டேட்களை தெரிந்து கொள்ள மறக்காமல் எங்களது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்


Post a Comment