மற்ற சோசியல் மீடியாவை விட வாட்சப் கொஞ்சம் மோசமானதுதான் |WhatsApp is a bit worse than other social media

 மற்ற சோசியல் மீடியாவை விட வாட்சப் கொஞ்சம் மோசமானதுதான்


FACEBOOK , INSTAGRAM , TWITTER இந்த மாதிரியான சோசியல் மீடியாவை விட வாட்சப் கொஞ்சம் ஆபத்தானதுதான் என்று சொல்லலாம்.
எந்த மாதிரியான விஷயத்தில் ஆபத்தானது என்று பார்த்தால்.,

வதந்திகளை பரப்புவதில் அதாவது பொய்யான தகவல்களை பரப்புவதில் வாட்ஸாப்த்தான் முதலில் உள்ளது என்று சொல்லலாம்.

பொதுவாக மற்ற சோசியல் மீடியாக்களில் ஒரு தகவல் வருகிறது என்றால் அதில் கமெண்ட்ஸ் என்கின்ற ஒரு பகுதி இருக்கும். அந்த கமெண்ட்ஸ் பகுதில் உள்ள கமெண்ட்ஸ்களை படித்து பார்த்தால் நாம் ஒரு முடிவுக்கு வரலாம். அந்த பதிவில்  உள்ளது உண்மையா அல்லது பொய்யானா தகவலா என்பதை தீர்மானிக்கும்படி அந்த கமெண்ட்ஸ் பகுதியில் யாரவது ஒருவர் உண்மையான தகவலை ஆதாரத்துடன் பதிவிட்டிருக்கலாம்.

அதை வைத்து நாம் அந்த தகவலை மற்றவர்களுக்கு அனுப்பாமல் தவிர்க்கலாம்.
இதன் உண்மையை கண்டறிய இங்கு ஒரு வழிமுறை உள்ளது. ஆனால் வாட்சப்பில் இது போன்ற வசதி கிடையாது.
நமக்கு ஒருவர் ஒரு செய்தி அனுப்பினால் அதை நாம் மட்டும்தான் பார்க்க முடியும். அதை உண்மை என நம்பி மற்றவர்களுக்கு அனுப்பிவைத்து விடுவோம்.
அந்த தகவலை பெறுபவர் இது உண்மை இல்லை என்று விவரமாக சொன்னால்தான் நமக்கு தெரியும். அவரும் அதை உண்மை என்று நம்பி விட்டால் ., அவரும் அதை மற்றவர்களுக்கு பரப்புவார்.

அந்த பொய்யான தகவல் மிக வேகமாக பல பேரிடம் சென்றடையும். இப்படித்தான் வாட்சப்பில் சில தகவல்கள் முடிவு பெறாமல் பல வருடமாக இன்னமும் சுற்றி கொண்டே இருக்கிறது.

இனிமேலாவது வாட்சப்பில் வரும் தகவலை அப்படியே நம்பிவிடாமல் அதன் உண்மை தன்மையை அறிந்து மற்றவர்களுக்கு அனுப்புங்கள்.

ஏனென்றால் சமூக வலைத்தளங்கள் அழகானதா!?  ஆபத்தானதா!? என்பது நாம் பயன்படுத்தும் முறையில்தான் உள்ளது.

தொழில்நுட்ப வசதி நம்முடைய வளர்ச்சிக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும்.
அதுவே பல பிரச்சினைகளுக்கு தூண்டுதலாக மாறிவிடக்கூடாது.



 More Information About Tech Related Updates SUBSCRIBE Our YOUTUBE CHANNEL👇



கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.