வாட்சப்பில் வந்துள்ள புதிய சேனல் அப்டேட்ஸ் பற்றிய முழு விவரம் | Full details about new channel updates on WhatsApp
வாட்சப்பில் வந்துள்ள புதிய சேனல் அப்டேட்ஸ் பற்றிய முழு விவரம்
வாட்சப்பில் உள்ள அணைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்:CLICK
அனைவருடைய கைகளில் இப்பொழுது ஸ்மார்ட் போன் உள்ளது. அப்படி ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் ஃபோனில் வாட்ஸ்அப் செயலி கண்டிப்பாக இருக்கும்.
இந்த whatsapp செயலியில் அவ்வப்போது புதிய மாற்றங்களை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது whatsapp-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட் சேனல் என்கிற வசதியை உருவாக்கி இருக்கிறார்கள்.
whatsapp சேனல் என்றால் என்ன அதில் நாம் எப்படி whatsapp சேனலை உருவாக்குவது இதில் ஏற்கனவே அதிகமானோர் வாட்ஸ் அப் சேனல் உருவாக்கி இருக்கிறார்கள் அதைப்பற்றி முழு விவரத்தையும் காண்போம்.
smartphone hidden setting features tips and tricks:CLICK
இந்த புதிய அப்டேட் முதலில் பீட்டா (BETA VERSION ) வெர்சனில் தான் அறிமுகமானது இப்பொழுது நடைமுறையில் உள்ள whatsappகளுக்கும் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த whatsapp சேனல் என்பது பேஸ்புக் பேஜ், ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்கள் போல் இதுவும் செயல்படும்.
ட்விட்டர் பேஸ்புக் பேஜ் இன்ஸ்டாகிராம் இதில் ஒருவரை நாம் பின் தொடரும் வசதி உள்ளது போல் இதில் உருவாக்கப்படும் சேனலிலும் நாம் ஒருவரை பின்தொடரலாம்.
அல்லது நமக்கென்று ஒரு சேனல் உருவாக்கி நம்மளுடைய சேனலையும் மற்றவர்கள் பின் தொடர வைக்கலாம்.
laptop&pc tips and tricks tamil:CLICK
மற்ற சோசியல் மீடியாக்களில் உள்ள முகப்பு படத்தையும் அவர்கள் பற்றிய விவரங்களையும் இன்னொருவர் பார்த்து தெரிந்து கொள்வதற்கான வசதிகள் உள்ளது.
அதை நாம் செக்யூரிட்டி லாக் செய்து வைத்துக் கொண்டால் மற்றவர்கள் அதை பார்க்க முடியாது என்கிற வசதியும் அதில் உள்ளது.
ஆனால் இந்த whatsapp சேனலில் நம்மளுடைய முகப்பு படத்தையும் போன் நம்பரையும் மற்றவர்களால் பார்க்க இயலாது.
அதுபோல் மற்றவர்களின் முகப்பு படத்தையும் போன் நம்பரையும் அவர்கள் பற்றிய விவரத்தையும் நாம் காண முடியாது.
நாம் சேனலில் முகப்பு படமாக வைத்திருக்கும் படத்தை மட்டும் தான் அவர்களால் பார்க்க முடியும்.
இந்த சேனலை யார் க்ரியேட் (CREATE ) செய்தார்கள் யார் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது பற்றிய விபரத்தை காண முடியாது.
இதில் நமக்கு என்று ஒரு சேனலை உருவாக்கி நமக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை இதில் பதிவிடலாம் அது மற்றவர்களும் அதை பார்க்கலாம்.
மற்ற சோசியல் மீடியாக்களில் நமக்கென்று ஒரு கணக்கை தொடங்கி அதில் வருவாயை ஈட்டுவது போல் இந்த whatsapp சேனல் உருவாக்கி இதிலும் நான் வருவாயை ஈட்டுவதற்கான வசதிகள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
video editing tutorial YouTube:CLICK
இது youtube சேனல் போன்று பிற்காலத்தில் செயல்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சேனலில் நாம் எழுத்துக்களாகவும் புகைப்படமாகவும் அல்லது காணொளியாகவும் பதிவேற்றம் செய்யலாம்.
நீங்கள் சொந்தமாக எதாவது தொழில் தொடங்கி இருந்தால்., உங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், அவர்களுக்கு உங்கள் பொருட்களின் விவரங்களை உங்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய இந்த சேனல் மிகவும் உதவியாக இருக்கும்.
unboxing and review new gadget mobile realated and electronics devices:CLICK
இந்த ஒரு புதிய வசதி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மற்ற சோசியல் மீடியாக்களின் பாதுகாப்பை விட இதனுடைய பாதுகாப்பு மிகவும் வேறுபட்டு காணப்படுகிறது.
இனி வரும் காலங்களில் whatsapp-இல் இன்னும் புதுப்புது மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப் பற்றிய முழு விவரத்தையும் வீடியோவாக காண 👇
இனி வரும் காலங்களில் whatsapp-ல் வரும் புதிய அப்டேட்கள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள யூடுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
Post a Comment