உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளே தானாகவே டச் ஆகிறதா | how to solve Ghost touch - wrong touch - automatically touch issues on smartphones

 உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளே  தானாகவே டச் ஆகிறதா அதை எப்படி சரி செய்வது



Follow Social Media Sites:

நாம்  உபயோகிக்கும் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் தானாகவே டச் ஆகி எதாவது ஓபன் ஆகும் அல்லது., நாம் ஒன்றை தொட்டால் அதில் வேறு எதாவது செயல்பாடு நடக்கும். இதை நாம் எப்படி சரி செய்வது.

இதை சரி செய்ய சர்விஸ் செண்டருக்கு எடுத்து சென்றால்., பெரும்பாலும் அவர்கள் சொல்லும் பதில் 
., டிஸ்பிளே மாற்றினால்தான் இது சரியாகும் என்பார்கள். இதனுடைய செலவு ஆயிரத்துக்கும் அதிகமாகவும்.

நீங்கள் அப்படி எடுத்து  செல்வதற்கு முன் ., ஒரு முறை இதை வீட்டில் செய்து பாருங்கள். இந்த பிரச்சினை சரியாவதற்கு வாய்ப்புண்டு.


1. ரீஸ்டார்ட் யுவர் போன் (Restart Your Phone )
இதற்க்கு முன் பட்டன் போனில் எதாவது பிரச்சினை என்றால் ., நாம் உடனே பேட்டரியை கழற்றி மாற்றுவோம் . இதனால் சில பிரச்சினைகள் சரியாகும்.
ஆனால்  இப்பொழு வருகின்ற போனில் பேட்டரியை கழட்டி மாற்ற முடியாதபடிதான் வருகிறது. அதற்க்கு பதிலாகத்தான் இந்த ரீஸ்டார்ட் முறை.
உங்கள் போனை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் ., உங்கள் போனில் உள்ள அணைத்த செயல்பாடுகளும் சிறிது நொடிகள் நிறுத்தி மறுபடியும் தொடங்கும். இதனால் டச்சுக்கான மென்பொருள் நிறுத்தி மறுபடியும் முதலில் இருந்து செயல்படும்.இது ஒரு வழிமுறை. 

2. போனின் டிஸ்பிளேவை சுத்தம் செய்யவும் (Clean The Screen)

உங்கள் போனின் டிஸ்பிளேயில் நீர் துளிகள் அல்லது ஈரமாக இருக்கிறதா என்று பாருங்கள். இதனால் கூட நாம் ஒரு இடத்தில தொடும் பொழுது அதன் செயல்பாடுகள் வேறு இடத்தில இருக்கும்.

3. டெம்பர் கிளாஸ் மற்றும் பவுச் நீக்கவும் (Remove Screen Protector or Case)

மொபைல் ஸ்கிரீனில் பாதுகாப்பிற்க்காக ஒட்டப்பட்டிருக்கும் டெம்பர் கிளாஸ் ஆனது சரியாக ஒட்டப்படாமல் இருந்தால் அதாவது!, எதாவது ஒரு பக்கம் தூக்கி கொண்டிருந்தால்., நாம் ஒரு இடத்தில தொடும் பொழுது அதன் அழுத்தம் வேறு இடத்தில் செயல்பட்டு தவறான செயல்பாடுகள் நடக்கலாம் . இதே போல்தான் உங்கள் போனில் பவுச் போடப்பட்டிருந்தால் (மொபைல் கவர்)., அந்த பவுச் உங்கள் போனில் உள்ள ஸ்கிரீனில் அழுத்தத்தை ஏற்படுத்தி தானாக இயங்குவதற்கான செயல்பாடுகள் நடக்கலாம். அதனால் இதை இரண்டையும் நீக்கிவிட்டு பாருங்கள்.

4. உங்கள் போனில் சாஃப்ட்வ்ர் அப்டேட் செய்யவும் (Update Software)

உங்களுடைய போனில் சிஸ்டெம் அப்டேட் கேட்டால் உடனே கொடுக்கவும். உங்கள் போனில் எதாவது மென்பொருள் சிக்கல்கள் இருந்தால் அதை தீர்ப்பதற்கு அந்த செல் போன் நிறுவனங்கள் வழங்கும் அப்டேட்தான் இது. இப்படி நீங்கள் அப்டேட் செய்வதால் மென்பொருள் குளறுபடி இருந்தால் இதில் சரியாக வாய்ப்புண்டு.


5. தொடும் திறனை அளவீடு செய்யவும் (5. Calibrate Touch Screen)
உங்கள் மொபைல் செட்டிங்சில் சென்று டச் ஸ்கிரீன் சென்சிடிவ் சோதனை செய்து பாருங்கள். இதற்க்கென்று கூகுளில் அதிகமான செயலிகள் உள்ளது அதன் மூலம் டச் சென்சிடிவை சோதனை செய்து கொள்ளலாம்.

6. செயலியை பரிசோதிக்கவும் ( Check for Rogue Apps)

நீங்கள்  பயன்படுத்தும் சில செயலிகள் மிக அதிக திறன் கொண்டதாக இருக்கும். அந்த செயலிகள்  பேட்டரியில் உள்ள மின்சக்திகள் மற்றும் அதிகமான ரேம் (RAM ) செயல்பாட்டையும் எடுத்துக்கொள்ளலாம் .  அதனால் நீங்கள் கடைசியாக எந்தந்த செயலியை பதிவிறக்கம் செய்தீர்களோ அதை ஒவ்வொன்றையும் நீக்கி சோதனை செய்து பாருங்கள். இதில் சரியாக வாய்ப்புண்டு.

7. பாதுகாப்பான செயல்முறை ( Safe Mode)

உங்கள் மொபைலில் மூன்றாம்  தரவு செயலிகளை அதாவது நீங்கள் மொபைல் வாங்கும் பொழுது அந்த மொபைலில் உள்ள செயலிகளை தவிர்த்து நீங்கள் இன்ஸ்டால் செய்த செயலிகளை தற்காலிகமாக டிசபிள் செய்யுங்கள். இதை பின்பற்றி பாருங்கள்.
இதில் மற்றொரு முறை உங்கள் போனின் பவ்ர் பட்டன் (POWER BUTTON + VOLUME INCREASE OR, POWER BUTTON + VOLUME DECREASE BUTTON) மற்றும் சவுண்ட் இன்கிரிஸ் அல்லது  சவுண்ட் டிகிரிஸ் பட்டனையும் சிறிது நேரம் அழுத்தி பிடித்திருந்தால் உங்கள் போனில் ரெக்கவர் (RECOVERY) பக்கத்திற்கு செல்லும். இதில் ரீபூட்  (REBOOT) அல்லது சேப் மோட் (SAFE MODE) யை செலக்ட் செய்து போனை ரீஸ்டார்ட் செய்யவும்.


8. ஃபெக்டரி ரீசெட் (Factory Reset)
இந்த வழிமுறைகளை பின்பற்றிய பின்பும் தொடர்ந்து இந்த பிரச்சினை உள்ளது என்றால் உங்கள் மொபைலை முழுவதுமாக ஏரஸ் ஆல் டேட்டா கொடுக்கவும். இதை செய்வதற்கு உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான தகவல்களை வேறு ஒரு சாதனத்தில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். மெம,சிம் கார்டு வெளியே எடுத்த பின்பு இதை செய்யவும். இதை செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள அணைத்து தகவல்களும் அழிந்துவிடும் போட்டோ,வீடியோ , மற்ற பைல்கள் உள்பட.

இதையெல்லாம் செய்த பின்பும் மறுபடியும் இத பிரச்சினை வருகிறது என்றால். உங்கள் மொபைலில் முக்கியமான சாஃட்வ்ர் அல்லது ஹார்ட்வேர் பிரச்சினை இருக்கலாம். அதனால்! இதற்க்கு பிறகு நீங்கள் சர்விஸ் செண்டருக்கு எடுத்து செல்லுங்கள்.

இது போன்ற செல்போன் சம்பந்தமான தகவல்களுக்கு நம்முளுடைய யூடியூப்  சேனல் மற்றும்  இந்த இணையதளத்தை பின்தொடரவும்.

 More Information About Tech Related Updates SUBSCRIBE Our YOUTUBE CHANNEL👇




.


கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.