பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போல பிரிவினையை தூண்டினாரா இந்த ஹாலிவுட் இயக்குனர் |Who is this Spike Lee Tamil?

Follow Social Media Sites:


இவர் ஒரு அமெரிக்கா பிலிம் மேக்கர் 1989 காலகட்டத்திற்கு முன்னால் பெரும்பாலான ஹாலிவுட்  படங்களில் கறுப்பர்களை தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்தது.

கறுப்பர்கள் கொள்ளையடிப்பது,கொலை செய்வது,பாலியல் மற்றும் வன்முறைக்கு இவர்களைத்தான் பெரும்பாலும் காட்டுவார்கள்.அதுவும் கறுப்பர்களை நடிக்க வைக்காமல் வெள்ளையர்கள் மீது கருப்பு சாயம் பூசி நடிக்க வைப்பார்கள் அந்த அளவிற்கு. கறுப்பர்கள் மீது வன்மத்தை கொட்டி வந்தார்கள்.

அதற்க்கு எதிர் கருத்து கொண்டவர்தான் இந்த ஸ்பைக் லீ என்கின்ற கறுப்பின பட இயக்குனர். (spike lee) இவர் வந்த பிறகு இவருடைய சமூக அக்கறையும் அரசியல் புரிதலும் அவருடைய பார்வையில் மக்களுக்கு தெரிய படுத்த விரும்பினார். அதன் விளைவாக இவர் இயக்கிய படம்தான்  " டூ தி ரைட் திங் 1989 ல் வெளி வந்தது . கறுப்பின இளைஞரின் கதை. அந்த படம் பேசப்பட்டது இவரும் விவாதத்துக்கு உள்ளானார்.

இவர் ஒரு பிரிவினைவாதி ,இதற்க்கு முன் யாரும் பிரித்து பார்க்கவில்லை எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்கின்ற வாதத்தையெல்லாம்  வைத்தார்கள் .ஆனால் மக்கள் இவருக்கும் இவரது படைப்புக்கும் அங்கீகாரம் கொடுத்தார்கள். குறிப்பாக வெள்ளையின மக்கள் மத்தியிலும் இவர் மதிக்கப்பட்டார். 

அவர் செய்த இந்த சம்பவத்தால்தான் இன்றைக்கு எந்த ஹாலிவுட் படம் வந்தாலும் கறுப்பினர் ஒரு கேரக்டர் இல்லாமல் படம் வருவதில்லை. அந்த கறுப்பினரையும் நல்லவர்களாகத்தான் காட்டியிருப்பார்கள்.

கறுப்பினர்களை தாழ்வாக காட்டும் பொழுது யாருக்கும் கோபம் வரவில்லை. ஆனால் கறுப்பினவர்கள்  அவர்களுடைய வாழ்வியலை எடுத்தும் சொல்லும் பொழுது .நீதான் பிரிவினைவாதி என்று ஒரு கும்பல் இவரை புறம் பேசியது.

ஆனால் இன்று இரண்டு மக்களிடையும் (கறுப்பின மக்கள்,வெள்ளையின மக்கள்) இவர் கொண்டாடப்படுகிறார்.

இது போலத்தான் தமிழ்நாட்டில் பா.ரஞ்சித்,மாரி செல்வராஜ், வெற்றிமாறன் படைப்புகள்  மீதும் ஒரு கூட்டம் வன்மத்தை கக்கி கொண்டிருக்கிறது.

அதற்க்கான பதிலை காலம் எழுதிக்கொண்டிருக்கிறது.

 More Information About Tech Related Updates SUBSCRIBE Our YOUTUBE CHANNEL👇




 

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.