smart phone battery tips

MOBILE BATTERY TIPS
நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்களின் சார்ச் நீண்ட நேரம் நீடிப்பதில்லை.எவ்வளவு விலை உயர்ந்த போன்களாக இருந்தாலும் இந்த பிரச்சினை இருந்து கொண்டேதான் இருக்கும்.இதற்க்கு காரணம் என்ன, போன்களில் இருக்கும் மென்பொருள்(SOFTWARE) மற்றும் செயலிதான்(APPS) காரணம். நாம் போன்களை உபயோகிக்காமல் அப்படியே வைத்திருந்தாலும்,தன்னிச்சையாக அந்த செயலி(APPS) பின்புலத்தில் இயங்கிகொண்டுதான் இருக்கும்.
அதனால் போன்களின் சார்ச் விரைவாக குறைந்துவிடுகிறது. இதற்க்கு என்னதான் தீர்வு.
சார்ச் விரைவாக தீர்ந்து போகாமல் இருக்க உங்கள் ஸ்மார்ட் போன்களுக்கு சில யோசனை(TIPS)

  • அடிக்கடி உபயோகபடுத்தாத (APPS)செயலியை நீக்கிவிடுங்கள்(UNINSTALL)
  • உங்களுக்கு அந்த செயலி தேவைபட்டால் (backup)சேமித்து வைத்துக்கொண்டு அதனை நீக்கிவிடுங்கள்(UNINSTALL),தேவைபடும்போது நிறுவி(install) கொள்ளலாம்.
  • வால்பேப்பர், ஸ்கிரீன்சேவரில் அசையும் படம் அதாவது அனிமேசன்(ANIMATION) படத்தை வைக்க வேண்டாம்.
  • வால்பேப்பர், ஸ்கிரீன்சேவரில் ப்ரைட்டாக இருக்கும் படத்தை வைக்காமல் டார்க்காக இருக்கும் படத்தை வைக்கலாம்.
  • பேட்டரி சேவர், ராம் க்ளீனர் என்று எந்த செயலியையும் பதவிறக்கம் செய்து நிறுவ வேண்டாம்.அதுவும் சார்ச் இறங்க வழிவகுக்கும்.
  • உங்கள் போனில் 100% சார்ச் வரும்வரை போடவேண்டாம்.90% அல்லது 95% வந்தவுடன் நிறுத்திவிடுங்கள். அதுபோல் சார்ச் போடும்போது 10% அல்லது 20% சார்ச் இறங்கும் போது போடுங்கள்.இது உங்கள் போனின் பேட்டரி லைஃப்பை அதிகபடுத்தும்.
  • இன்டர்நெட்,வைஃபி,ப்ளுடூத்,ஹாட்ஸ்பாட்,ஜிபிஎஸ் இவை அனைத்தும் தேவைபடும்போது மட்டும் ஆன் செய்யுங்கள்.
  • நீங்கள் வெளியே பயணம் செய்யும்போழுது உங்கள் போன் சார்ச் குறைவாக இருந்தால்,உங்களுக்கு வரும் அழைப்புகளை நீங்கள் ஏற்காமல்,நீங்கள் மட்டுமே கால் பன்ன வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்.,போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின்பு ஆன் பன்ன வேண்டாம். இதனால் ஆஃப் செய்து ஆன் செய்யும் பொழுது அதிக சார்ச் எடுத்துக்கொள்ளும்.உங்கள் போனை ஃப்ளைட் மோடில் போட்டு வையுங்கள்.இதனால் நெட்வொர்க் கிடைக்காததால் அதனை சார்ந்துள்ள செயலிகள் பின்புலத்தில் இயங்குவுது தடைபடும்.இதனால் சார்ச் இன்னும் கொஞ்ச நேரம் தாக்குபிடிக்கும்.
  • தினமும் ஒருமணி நேரம் அல்லது அரைமணி நேரம் உங்கள் போனை ஆஃப் செய்து ஆன் செய்யுங்கள்,அப்படி இல்லையென்றால் தானாக ஆஃப்பாகி ஆனாகும்படி போன் செட்டிங்கில் இருக்கும், அதை செயல்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.இதன் மூலமும் பேட்டரி திறனை அதிகபடுத்தலாம்.
  • முடிந்தவரை ப்ரைட்னஸ் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.
இதை செய்தாலே சார்ச் விரைவாக குறைவதை தடுக்கலாம்.
நன்றி

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.