Mainly for women.

பெண்களுக்கான முக்கிய பதிவு. பெண்கள் தங்களுடைய மொபைலில் விளையாட்டாக எடுக்கும் அந்தரங்க போட்டோக்கள் வீடியோக்கள் எப்படி இணையதளத்தில் வெளி வருகிறது.



அவர்கள் தங்களை தானே செல்பி எடுத்துக் கொண்ட.பின்பு அதை மொபைலில் இருந்து நீக்கிவிடுவார்கள்.அப்படி நீக்கிய போட்டோகளும்,  வீடியோக்களும் மொபைலில் ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

இதை சாதாரணமாக நாம் காண முடியாது. இதற்கென்று தனியாக சாப்ட்வேர் உள்ளது.இந்த சாப்ட்வேர் மூலம் டெலிட் செய்யப்பட்ட அத்தனை புகைப்படங்கள் வீடியோக்கள் திரும்ப எடுத்து விடலாம். டேட்டா ரிக்கவரி சாப்ட்வேர் மூலம் டெலிட் செய்த அத்தனையும் திரும்ப எடுத்து விடலாம். இந்த சாப்ட்வேர்கள் இணையதளத்தில் இலவசமாகவும் பணம் செலுத்தியும் வாங்க முடியும்.நாம்தான் டெலிட் செய்து விட்டோமே என்று கவனக்குறைவாக இருந்துவிட வேண்டாம்.

உங்கள் மொபைல் பழுதாகி விட்டால் அதை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்லும் பொழுது இந்த சாப்ட்வேர் மூலம் டெலிட் செய்ததை ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் எடுத்துவிடலாம்.
அதனால் பெண்கள் யாரும் தங்களுடைய மொபைலில்  அந்தரங்க புகைப்படத்தையோ வீடியோவையோ சேமித்து வைக்க வேண்டாம்.மெமரி கார்டில் சேமித்து வைக்கும் படி செட்டிங்க்ஸை மாற்றிக் கொள்ளவும். 

எல்லா சர்வீஸ் சென்டர்களிலும் இதுபோல் நடக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் எல்லோரும் நல்லவர்கள் என்று நம்பவும் முடியாது.நீங்கள் மெமரி கார்டில் சேமித்து வைத்தால் பழுது நீக்க கடைக்கு செல்லும் முன் அந்த மெமரி கார்டை எடுத்து விட்டு மொபைலை மட்டும் அவர்களிடம்  கொடுக்கலாம். ஆகையால் உங்கள் அந்தரங்கம் பாதுகாக்கப்படும்.

 நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே பெண்கள் தங்கள் மொபைலை கொடுக்க வேண்டும்.உங்கள் பாதுகாப்பு உங்களிடம் மட்டுமே உள்ளது. இதை உங்கள் வீட்டு பெண்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அவர்களும் பாதுகாப்பாக மொபைலை உபயோகிக்கட்டும்.

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

Blogger இயக்குவது.